கல்லூரி கீதம்
உவர்மலை விவேகானந்தாகல்லூரி வாழ்க
ஊதா வெள்ளை கொடி நிமிர்ந்தாட
உவர்மலை மக்கள் உவர்ந்தளித்தனராம்
உயரிய செயலால் உளம் நிறைந்தனராம்
ஒளியருள் கோணேசர் மலை முடியில் - எங்கள்
எழில் தவழ் உவர்மலை கலை வடிவில்
கிளிமொழி தமிழ் எங்கும் வழிந்தோட - அதன்
கிருபையில் நாட்களும் கழிந்தோட
கங்கா யமுனா காவேரி சிந்து
கற்பவரிடையே படை நான்கும்
எங்கள் திறமைகள் துலங்கிடுமே
அதன் இனிமையில் பணிகளைத் தொடங்குவோமே
உலகின் சிகரம் கல்வியென்போம் - அதன்
உண்மையை உணர்வோம் உயர்வடைவோம்
கலைகள் பலவும் வளர்த்திடுவோம் - என்றும்
கற்றதை மற்றவர்க் குணர்த்திடுவோம்
0 comments:
Post a Comment